துபாய் லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.. ரூ.2.35 கோடி வென்ற திருநெல்வேலிக்காரர்!

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பீர் முகமது அசாம் (41). துபாயில் உள்ள ஒரு பொது நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.துபாய் லாட்டரியில் 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் தோராயமாக 2.35 கோடி) பரிசை வென்றுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் 2017 முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என் மனைவியும் 4 வயது மகளும் என் சொந்த ஊரில் வசிக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக, இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்கள் உட்பட 20 நண்பர்களுடன் ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். இந்த முறை, அவற்றை என் பெயரில் வாங்கி லாட்டரி குலுக்கல்லில் பங்கேற்றோம். நாங்கள் கூட்டாக 20 டிக்கெட்டுகளை வாங்க பணத்தை சேமித்து வைத்தோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் லாட்டரியில் எனது கணக்கின் கீழ் உள்ள ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் எண்களைத் தேர்ந்தெடுத்தேன்.
ஒரு டிக்கெட் எண் வெற்றி பெற்ற எண்களுடன் பொருந்தியது. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 1 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதை எனது அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.நாங்கள் வெற்றி பெற்றதை அறிந்தபோது இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதன் மூலம் எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய முடியும். அதில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவேன்’’ என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!