அதிகாலையில் அதிர்ச்சி... மியான்மரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் இன்று ஜனவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்று அதிகாலை 12.53 மணிக்கு மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை 12.53 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய அட்சரேகை 24.92 N மற்றும் தீர்க்கரேகை 94.97 E ல் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .4.8 ரிக்டர் என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை எனத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது அந்நாட்டு அரசால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!