கள்ளக்குறிச்சி அருகே நில அதிர்ச்சி... அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!
இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.
இன்று காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்தபடியே வெளியேறினர்.
சங்கராபுரம், கல்வராயன் மலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் கூறினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!