அலாஸ்கா–கனடா எல்லையில் 7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்… வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!

 
நிலநடுக்கம்
 

வட அமெரிக்காவில் அலாஸ்கா மற்றும் கனடாவுக்கு நடுவே உள்ள யுகோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர். சில வினாடிகள் நீடித்த அதிர்வு காரணமாக, அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் வங்கதேசம்

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோ நகரத்திற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனின் வைட்ஹார்ஸ் நகரத்திற்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இருப்பினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையம் தரப்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது மக்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!