கிழக்கு திசை காற்று வேகமாறுபாடு... தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஒரு சில இடங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்வது தொடர்கிறது.
இதற்கிடையே, கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்பட்டது. இதையடுத்து இன்று ஜனவரி 3ம் தேதி முதல் முதல் ஜனவரி 8ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் இருக்கும். ஜனவரி 7, 8ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!