ஈஸியான ரெஸிப்பி... குழந்தைகளுக்கும் சத்தான உணவு... பள்ளிவாசல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி?!

 
ரமலான் நோன்பு கஞ்சி

இஸ்லாமிய சகோதரர்கள்  புனித ரமலான் மாதத்தில் நாள் முழுவதுமே  சாப்பிடாமல் இருந்து  மாலை நேரத்தில் நோன்பு திறக்கும் போது நோன்பு கஞ்சி குடிப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் மத பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நோன்பு கஞ்சி வழங்கப்படும்.  

ரமலான் மாதம் முழுக்க நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். அரிசி, மட்டன் கறி, தேங்காய் பால், பாசிப் பருப்பு போட்டு செய்யக்கூடியது இந்த நோன்பு கஞ்சி. காலையில் இருந்து நோன்பு திறந்தவர்களுக்கு குறைவான நேரத்திலேயே மொத்த ஆற்றலையும் கொடுக்கும்.  இந்த நோன்பு கஞ்சியை வீட்டிலேயே சுவையாக சமைக்கலாம்.

நோன்பு

பள்ளி வாசல் நோன்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்  

சீரக சம்பா அரிசி
மட்டன் கறி
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
நல்லெண்ணெய்
நெய்
தேங்காய் பால்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
புதினா
உப்பு
சீரக சம்பா அரிசிக்கு பதில் பச்சரிசி கூட பயன்படுத்தலாம்.

ரம்ஜான் நோன்பு

செய்முறை

குக்கரில் நோன்பு கஞ்சி செய்வதற்கு 2 ஸ்பூன் நல்லெண்ணெய், 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,  அரை டீஸ்பூன் வெந்தயம் சேருங்கள்.

இத்துடன்  10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு இடித்து சேர்த்து ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். அடுத்து 3 பச்சை மிளகாய், ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்து கை நிறைய கொத்தமல்லி, புதினா போட்டு கலந்து விட வேண்டும்.  

தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு 2 டீஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.  

100 கிராம் மட்டன் கொத்துக்கறியை தண்ணீரில் நன்கு கழுவி உப்பு சேர்த்து மட்டனை வேக விட வேண்டும்.  

முன்னதாக 150 கிராம் சீரக சம்பா அரிசி, 25 கிராம் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊறவைத்துவிட வேண்டியது அவசியம்.  

இப்போது அரிசி, பாசிப்பருப்பு சேர்த்து ஆறு கப் தண்ணீர் ஊற்றவும். இப்போது தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி 5 நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டும்.  

அரிசி, மட்டன் நன்கு வெந்த பிறகு கரண்டி வைத்து மசித்துவிட்டு 50 மில்லி தேங்காய் பால் ஊற்றி  ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டியது தான். கமகம வாசனையில் பள்ளிவாசல் நோன்பு கஞ்சி அட்டகாசமாக தயார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web