புது வருஷ துவக்கத்திலேயே பெரும் அதிர்ச்சி... நடிகை ஏஞ்சலினா ஜோலி அதிகாரப்பூர்வ விவாகரத்து!
புது வருடத்தில் பெரும் அதிர்ச்சியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அதிகாரப்பூர்வமாக விவாகரத்துப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டுடன் லிவ்-இன் உறவில் இருந்து வந்த நடிகை ஏஞ்சலினா ஜோலி, 2014ல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், போரினால் அகதிகளாக வந்த 3 குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இதையடுத்து, 2016ல் நடிகர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி ஏஞ்சலினா ஜோலி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனியார் ஜெட் விமானத்தில் பிராட் பிட் தன்னுடனும் தனது குழந்தைகளுடனும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பிராட் பிட்டிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்த விவாகரத்து வழக்கு அவர்களது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து விட்டதாக ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவரும் அவரது குழந்தைகளும் பிராட் பிட்டுடன் பகிர்ந்து கொண்ட அனைத்து சொத்துக்களையும் விட்டு விட்டனர். "அதிலிருந்து, ஏஞ்சலினா அமைதியை நோக்கி பயணித்து வருகிறார். இப்போது அவர் நிம்மதியாக இருப்பார்" என்று அவர் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!