அடேங்கப்பா… ரூ.96 கோடிக்கு ஏலம் போன கையெழுத்து!! வாய் பிளந்த பார்வையாளர்கள்!

 
அடேங்கப்பா… ரூ.96 கோடிக்கு ஏலம் போன கையெழுத்து!! வாய் பிளந்த பார்வையாளர்கள்!


உலகின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன். இவருடைய சார்பியல் கோட்பாடுகளால் உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர். இவருடைய கையெழுத்து பிரதி ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த பிரதி பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம்,இதனை ஏலத்திற்கு விட்டது.

அடேங்கப்பா… ரூ.96 கோடிக்கு ஏலம் போன கையெழுத்து!! வாய் பிளந்த பார்வையாளர்கள்!


அவர் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆரம்ப ஏலத்தொகை 2 மில்லியன் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஐன்ஸ்டீனின் 54 பக்க கையெழுத்து பிரதியை அவருடைய நெருங்கிய நண்பர் சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் மிச்செல் பெஸ்ஸோ பாதுகாப்பாக வைத்திருந்தார்.

ஐன்ஸ்டீனுடன் ஆராய்ச்சியில் அவரும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை மூலமாக கொண்டு தான் இன்றைய ஜிபிஎஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. கோட்பாடுகள் தொடர்புடைய நூல்களை ஆவணப்படுத்தும் வகையில் இது நடத்தப்பட்டுள்ளது என ஏலத்தை நடத்திய கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா… ரூ.96 கோடிக்கு ஏலம் போன கையெழுத்து!! வாய் பிளந்த பார்வையாளர்கள்!


ஐன்ஸ்டீனால் 1919க்கு முன்னால் இருந்தவை. அதனால் இவை அரிதான பொக்கிஷங்களாக பார்க்கப்படுகிறது. கோட்பாட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். கருப்பு நிற மையால் லேசான மஞ்சள் நிற கசங்கிய தாளாக இந்த பிரதி உள்ளது.எனினும், இந்த ஏலத்தில் இத்தனை பெரிய தொகை கொடுத்து அந்த பிரதியை வாங்கிய அதிர்ஷ்டசாலி குறித்து ஏல நிறுவனம் குறிப்பிடவில்லை.

From around the web