தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பே தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு 2020 டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை போன்ற பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 15க்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது, ஓட்டுப்பதிவு நடத்துவது, வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிப்பது என அனைத்து பணிகளும் செப்டம்பர் 15க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 4 புதிய நீட் தேர்வு மையங்கள் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழகத்தில் விடுபட்ட பகுதிகளில் செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல்!அமைச்சர் உறுதி!

இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web