அக். 28ல் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெறும்... துரைமுருகன்!

 
துரைமுருகன்
 

  சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலையில் அமைந்துள்ள ‘கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில்’ காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டல் வழங்கப்படும்.

துரைமுருகன்

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் எம்.கே. ஸ்டாலின் தலைமையில் கட்சி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், மத்திய பாஜக அரசின் “வஞ்சக சூழ்ச்சிக்கு எதிராக தமிழ்நாடு தலைகுனியாது” என்ற முழக்கத்துடன் பரப்புரை தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

 முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்கணும்... அமைச்சர் துரைமுருகன் அட்ராசிட்டி!  

இந்த தேர்தல் பயிற்சிக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் அழைப்புவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?