மின்சார ரயில்கள் பாதியில் நிறுத்தம்... பயணிகள் கடும் அவதி!

 
எண்ணூர்


 
 மின்சார ரயில் உயர் மின்னழுத்த கம்பிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்பவர்கள் பலர் மின்சார ரயில்களில் காத்துக்கிடந்தனர். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில் சேவை சுமார் 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
இதன் காரணமாக, ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார ரயில்

எண்ணூர் – திருவொற்றியூர் ரயில் நிலையங்களில், ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டது. இந்த சிக்கல் விரைவில் சீர் செய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web