சார்... அமலாக்கத்துறை ரெய்டு... “ஆளை விடுங்க...” நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு டோக்கன் விநியோகத்தை இன்று காலை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமலாக்கதுறையினர் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்வது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவி சென்றார்.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகிய அடங்கிய பொருட்கள் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று முதல் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி டோக்கன் விநியோகத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்படுமெனவும் அதில் குறிப்பிட்ட தேதிகளான 9,10, 11, 12, ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விடுபட்டவரக்ள் 13 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சர் பொன்முடியிடம், அமைச்சர் துரை முருகன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்வது தொடர்பாக கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!