ஈரோடு இடைத்தேர்தல்... நாம் தமிழர் நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

 
நாம் தமிழர்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினர் இன்று பிரச்சாரம் துவங்கிய நிலையில், அனுமதியில்லாமல் பிரச்சாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொகுதி முழுக்கவே பரபரப்படைந்துள்ளது. பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகிகள் பதாகைகளை ஏந்தி சாலையோரம் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர்

அப்போது அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் , ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web