பிரபல தொழிலதிபர் எஸ்ஸார் குழும நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்... இன்று மாலை இறுதிச்சடங்குகள்.. பிரபலங்கள் இரங்கல்!
எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 81.
முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழிலதிபரான ஷஷி, தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் 1965ல் தனது தொழில்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷாஷி ரூயா நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார்.
மெட்டல்ஸ்-டு-டெக்னாலஜி நிறுவனமான எஸ்ஸார் நிறுவனத்தை தனது சகோதரர் ரவியுடன் இணைந்து நிறுவியவர் ரூயா. நேற்றிரவு 11.55 மணிக்கு மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நாடு திரும்பினார். அவரது உடல் இன்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை ரூயா இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதி ஊர்வலம் ரூயா இல்லத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இந்து வொர்லி தகன மைதானம் நோக்கிப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷஷி ரூயா, தனது சகோதரர் ரவியுடன் சேர்ந்து 1969ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் வெளிப்புற பிரேக்வாட்டர் அமைப்பதன் மூலம் எஸ்ஸார் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். எஃகு, எண்ணெய் சுத்திகரிப்பு, ஆய்வு மற்றும் உற்பத்தி, தொலைத்தொடர்பு, மின்சாரம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குழு விரிவடைந்தது. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், பிரசாந்த், அன்சுமான் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!