’ஒவ்வொரு பிராமணர்களும் 4 குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்’.. சர்ச்சையை கிளப்பிய பாஜக அமைச்சர்!

 
அமைச்சர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா

மத்தியப் பிரதேசம் பாஜக ஆட்சியில் உள்ளது. மோகன் யாதவ் முதல்வர். இந்த பாஜக அரசாங்கத்தில் அமைச்சர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா. அவர் மாநில பிராமண வாரியத்தின் தலைவராகவும் உள்ளார். குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்ற பிராமணர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வெகுமதியை அறிவித்தவரும் அவர்தான்.



போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு ரஜோரியா, “இன்றைய இளம் தலைமுறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. முதியவர்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள், எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. இளைஞர்கள் வாழ்க்கையில்  செட்டில் ஆன பிறகு ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.

இது ஒரு பெரிய பிரச்சனை. நீங்கள் (பிராமணர்கள்) குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், பரசுராம் கல்யாண் வாரியத்தின் சார்பாக உங்களுக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி வழங்கப்படும். ” அவர் வாரியத்தின் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது தொடரும் என்று அவர் கூறினார்.

அமைச்சர் விஷ்ணு ரஜோரியாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் முகேஷ் நாயக் கூறுகையில், "மக்கள்தொகை வளர்ச்சி உலக அளவில் ஒரு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறைவான குழந்தைகளைப் பெற்றால் மட்டுமே அவர்களுக்கு கல்வி மற்றும் பிற விஷயங்களை உறுதி செய்ய முடியும். ஆனால் அவர்கள் இந்த பிரச்சனையை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றுகிறார்கள். இவை அனைத்தும் கற்பனையான எண்ணங்கள். நாம் ஒன்றுபட்டால் மட்டுமே நாடு வலுவாக இருக்கும்."

பாஜக அரசு இந்த பிரச்சனையிலிருந்து விலகியே உள்ளது. இது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web