தினமும் டார்ச்சர்.. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. போராட்டத்தில் குதித்த திருநங்கைகள்!

 
வராகி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற (வராகி) திருநங்கை சிவதாபுரத்தில் உள்ள  இவர்கள் இல்லத்திற்கு அடைக்கலம் தேடி வந்தார். அப்போது, ​​பெற்றோர் அடித்து துன்புறுத்தியதாக கூறி திருநங்கைகளுடன் சேர்ந்தார். இந்நிலையில் நேற்று, சிவதாபுரத்தில் உள்ள திருநங்கைகள் இல்லத்துக்கு, திருநங்கை வாராகியின் பெற்றோர், அடியாட்களுடன் வந்தனர்.

பின்னர் தங்கள் மகனை அழைத்து வர வந்ததாக தெரிவித்தனர். வாரகி பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். மேலும் நான் திருநங்கைகளுடன் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் திருநங்கைகளை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திருநங்கைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் வாராகியின் பெற்றோரை அழைத்து சமாதானமாகச் செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது, ​​திருநங்கை என்பதால், பெற்றோருடன் செல்லமாட்டேன், திருநங்கைகளுடன் தான் தங்குவேன் என, போலீஸ் ஸ்டேஷனில் வாரகி கண்டிப்புடன் கூறினார்.

பின்னர் திருநங்கைகள் காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நேற்று பத்துக்கும் மேற்பட்டோர் சிவதாபுரத்தில் உள்ள திருநங்கைகளின் வீட்டிற்கு சென்று திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டவுன் போலீசார் வந்து திருநங்கைகளை சமாதானம் செய்தனர்.

திருநங்கைகள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். வாராகி, ஆணில் இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை, எங்களுடன் இருக்க விரும்புகிறாள். பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். ஆனால், வாராகியை அங்கிருந்து அனுப்புமாறு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். வாராகியையும், தங்களுடன் வராவிட்டால் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் திருநங்கைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், திருநங்கைகளை பாதுகாக்கவும் கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web