பகீர் வீடியோ... முன்னாள் அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல்... தலையில் கொட்டிய ரத்தத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

 
அனில் தேஷ்முக்

 மகாராஷ்டிர மாநிலத்தின்  முன்னாள் உள்துறை அமைச்சர்  சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்  கட்சி மூத்த தலைவர்  அனில் தேஷ்முக் . இவர் நேற்று நாக்பூர் மாவட்டம் நார்கேட் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டதில் கலந்துகொண்ட பிறகு  கடோலுக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

 இரவு 8 மணி அளவில் கடோல் அருகே ஜலால்கேடா சாலையில் உள்ள பெல்பாட்டா அருகே வந்து கொண்டிருந்த போது, அனில் தேஷ்முக்கின் காரின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அனில் தேஷ்முக்கின் தலைப்பகுதியில் கற்கள் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அனில் தேஷ்முக்

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும்  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web