பகீர் வீடியோ... உசுர பணயம் வைத்து 30 அடி உயர நெடுஞ்சாலை பெயர் பலகையில் உடற்பயிற்சி!

 
நெடுஞ்சாலை பலகை

 இன்றைய இளசுகளிடையே ரீல்ஸ்கள், லைக்குகள் தான் வாழ்வின் முக்கியமான நோக்கங்களாக உலா வருகிறது. இவர்களின் இத்தகைய போக்கு பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதியில் 30 அடி உயர நெடுஞ்சாலை பெயர்ப்பலகையில் சட்டை இல்லாமல் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்கிறார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.  அந்த வைரல் ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் பிரபலமாக அறியப்பட்ட மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒலிப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பார்வையாளர்களிடையே வேடிக்கையாக தோன்றினாலும் மிகுந்த ஆபத்தான செயலாக இருப்பதால் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

உத்தரபிரதேச போலீஸ்

இந்த வீடியோவின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோவில் பதிவாகியுள்ள சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண முயற்சி நடைபெற்று வருகிறது. விரைவில்  அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web