வேறொருவரை திருமணம் செய்து கொண்ட முன்னாள் காதலி.. கொலை செய்ய ரூம் போட்ட நபர்.. அதிர்ச்சி பின்னணி!

 
சிவசங்கர்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண், கரூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமம் வடக்குப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞரை மணந்து, கடந்த 13 ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பிறகு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், 19 வயது பெண்ணின் முன்னாள் காதலரான சிவகங்கை மாவட்டம் சூசையப்பர்பட்டினம் காளையார் கோவிலைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர், அந்தப் பெண் மீது ஒருதலை  காதல் கொண்டிருந்ததால், தான் காதலித்த பெண் வேறொருவரை மணந்ததால் கோபத்தில் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

காதல்

மேலும், அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கொல்லும் நோக்கத்துடன், மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (38) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நாராயண் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) ஆகியோர் கரூர் மாநகராட்சியின் சுங்க கேட் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் லாட்ஜில் ஆயுதங்களுடன் ஒரு அறையில் தங்கியுள்ளனர். இது குறித்து பசுபதிபாளையம் சிறப்பு பிரிவு போலீஸ் கான்ஸ்டபிள் ராமலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் சதியில் ஈடுபட்ட சிவசங்கர், ஆனந்த், ஹரிஹரன் ஆகிய மூன்று பேரை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.  முன்னாள் காதலியை கொல்ல கூலிப்படையினருடன் ஆயுதங்களுடன் அறையில் தங்கி சதியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web