வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து.. 12 பேர் உடல் கருகி பலியான சோகம்!
துருக்கியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று (டிச.,24) தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த பயங்கர விபத்தால் அருகில் உள்ள கட்டடங்களும் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த விபத்தில் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!