பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து... 6 பேர் பலி; 8 பேர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். மதிய வேளையில் திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியன. சில நொடிகளில் தீ தொழிற்சாலை முழுவதும் பரவி, கொளுந்து பிடித்தது.

தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள் 6 பணியாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 8 பேர் தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
