வெடித்த ஆசிட் பாட்டில்! பள்ளி மாணவிகள் படுகாயம்!

 
வெடித்த ஆசிட் பாட்டில்! பள்ளி மாணவிகள் படுகாயம்!


விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் ஆய்வகம் விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக விரைவில் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆய்வகத்தை இடமாற்ற திட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அங்கிருந்த பொருட்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக பள்ளி நிர்வாகம் 12ம் வகுப்பு மாணவிகளை பொறுப்பாளர்களாக நியமித்து இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

வெடித்த ஆசிட் பாட்டில்! பள்ளி மாணவிகள் படுகாயம்!

பாமா, ஆதிஷா, ஜனனி மற்றும் நித்யா ஆகியோரை தலைமை ஆசிரியர் இந்தப் பணியில் நியமித்தார்.இவர்கள் நால்வரும் ஆய்வகத்தில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக கவனமாக வெளியேற்றி கொண்டிருந்தனர்.
அப்போது ஆய்வகத்தில் இருந்த நைட்ரிக் ஆக்ஸைடு, சல்பர் ஆசிட் மீது திடீரென கல் பட்டு வெடித்தது. கத்தி கூச்சலிட்டபடியே 4 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.

வெடித்த ஆசிட் பாட்டில்! பள்ளி மாணவிகள் படுகாயம்!

படுகாயமடைந்த 4 மாணவிகளையும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பாமா என்ற மாணவிக்கு முகம் முழுவதும் ஆசிட் பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வருக்கும் புதுச்சேரியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web