மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 
தேர்வு
 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விடுமுறை தினங்களை நீட்டிக்க பலரும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், காலாண்டு விடுமுறை தினங்களை நீட்டிப்பது குறித்து, துறை சார்ந்து பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேர்வு

நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் தரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதன் பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி,“பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 3500 பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 3500 கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்வு

ராமநாதபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவித்தப்படி விடப்படும். விடுமுறை தினங்களை நீட்டிப்பது குறித்து துறை சார்ந்து பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web