வசூல் வேட்டையில் இறங்கிய பாஜக நிர்வாகி... அதிகாரி என மிரட்டி கோவையில் பணம் பறிப்பு!

 
கைது

தன்னை அதிகாரி என்று கூறிக்கொண்டு சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பணம் பறித்து வந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் கோழிப்பண்ணை ஒன்று இயங்கி வந்த நிலையில், நேற்று இந்த கோழிப்பண்ணைக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு சிலர் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஐயனார் மற்றும் அவரது நண்பர் ரவி. இருவரும் டாஸ்மாக்கில் மது அருந்தி நண்பர்களாகிவிட்டனர். சேலம் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி பொறுப்பாளராக ஐயனார் உள்ளார். ஐயனார், ரவி ஆகிய இருவரும் தங்களை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என கூறி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு காரில் சென்று, போலி அடையாள அட்டையை காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதேபோல் நேற்று நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று பணம் கேட்டுள்ளனர். இதை பார்த்த கோழிப்பண்ணை உரிமையாளர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஐயனார், ரவி ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் பொதுமக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி தொடர் பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பா.ஜ.,வில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்களை, தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் சேலத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் என்றும் அதனால்தான் அவர்கள் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கைது

சேலம் பா.ஜ., பிரமுகர்கள் சிலர் கூறுகையில், ஐயனார் ஏற்கனவே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஐயனாரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். ஆனால், பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web