ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்... ரூ.43½ லட்சம் அபராதம் வசூல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி தெரிவித்தார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம், முன்பதிவு மோசடி, அனுமதியின்றி நின்று பயணிகள் ஏற்றிச் செல்வது போன்ற குறைகளை கட்டுப்படுத்த 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், பேருந்துகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் வருவது 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 16ம் தேதி தொடங்கிய சோதனைகளில் இதுவரை 357 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.43 லட்சத்து 55 ஆயிரத்து 961 அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் முன்பதிவு செயலிகள் மூலம் அதிக கட்டணம் நிர்ணயித்த ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பண்டிகை பயணங்கள் சிரமமின்றி நடைபெற அனைத்துப் பிரிவுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. பொதுமக்கள் புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்” என தெரிவித்தனர். இந்நிலையில் தீபாவளி பயணங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
