முகச் சிதைவால் பாதிப்பு... குணமடைந்த டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு வீட்டுமனையுடன், வீடு கட்டி முடிக்கப்பட்டு அதற்கான ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி டான்யா. சிறுமி டான்யாவுக்கு அரிய வகையான முகச்சிதைவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னுடைய நிலை குறித்து தெரிவித்தனர். இதனடிப்படையில் தமிழக முதல்வர், சிறுமி டான்யாவின் உடல் நிலையினை கருதி மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தரவும் ஆணையிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுரடிக்கு மிகாமல் வீடுகட்டி முடிக்கப்பட்டு நேற்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டு சிறுமி தான்யாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி டான்யா, “இரண்டு வருடத்திற்கு முன் என்னை பலரும் கேலி செய்தனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் என்னுடன் அனைவரும் இயல்பாக பழகுகின்றனர். தற்போது எனக்கும் சொந்தமாக வீடு உள்ளது என நண்பர்களுடன் மகிழ்ச்சியாக தெரிவிப்பேன். எதிர்காலத்தில் எனக்கு மருத்துவராக ஆக வேண்டும் ஆசை உள்ளது. அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நன்றி” என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!