அரையாண்டு தேர்வில் தோல்வி.. விரக்தியில் +1 மாணவி எடுத்த விபரீத முடிவு!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த நத்தமேடு சரவண நகரில் வசிப்பவர் முருகன். அவரது மனைவி தீபா. அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். இவர்களது மகள் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை முருகன், தீபா மற்றும் அவர்களது மகன் வேலைக்குச் சென்றிருந்தனர்.
ஆனால், மாலையில் பெற்றோர் வீடு திரும்பியபோது, தங்கள் மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையைத் தொடர்ந்த போலீசார், தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று முன்தினம், மாணவிக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. மாணவி சில பாடங்களில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!