உஷார்!! 10,000 போலி முட்டைகள் விற்பனை ! தலைமறைவான வியாபாரி!!

 
உஷார்!! 10,000 போலி முட்டைகள் விற்பனை ! தலைமறைவான வியாபாரி!!

10,000 போலியான கோழி முட்டைகளை ஏமாற்றி விற்பனை செய்த வியாபாரி தலைமறைவாக உள்ளார். ஆர்வமுடன் அலைமோதியபடி கோழி முட்டைகளை வாங்கிச் சென்ற பொதுமக்கள், நீண்ட நேரம் வேக வைத்தும், முட்டைகள் வேகாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உஷார்!! 10,000 போலி முட்டைகள் விற்பனை ! தலைமறைவான வியாபாரி!!

உலகம் முழுவதுமே புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்ட ஆரம்ப நாட்கள் முதலே அசைவ உணவுக்கு மவுசு குறைந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை அசைவ உணவை கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என அதிகளவில் இருந்த மக்கள் கூட்டம், வெள்ளி சனிக்கிழமைகளிலேயே ஆட்டிறைச்சியையும், கோழி இறைச்சியையும் வாங்கி ப்ரிட்ஜில் வைக்கத் தொடங்கி விட்டனர்.

எதற்கு கொரோனாவுடன் வாழ பழக வேண்டும் என்று சிலர், ஆரோக்கியத்திற்காகவும், அசைவ பழக்கத்திற்காகவும் தினந்தோறும் முட்டையை உட்கொள்ள துவங்கினார்கள். முட்டை விலையும் சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் போலி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

உஷார்!! 10,000 போலி முட்டைகள் விற்பனை ! தலைமறைவான வியாபாரி!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில், மினி லாரியில் ஒருவர் முட்டைகளை மொத்தமாகக் கொண்டு வந்து விற்பனை செய்யதுள்ளார். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய் என விற்பனை செய்ததால், ஒரு மணி நேரத்திலேயே அனைத்து முட்டைகளும் விற்று தீர்ந்தது. அவரிடம் வாங்கிய முட்டைகளை பயன்படுத்திய பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீண்ட நேரமாகியும் முட்டைகள் வேகாமல் இருந்ததை கண்டு பொதுமக்கள், அவரைத் தேட துவங்கினார்கள்.

முட்டையை உடைக்க முயன்றும் அது உடையவில்லை. பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். தப்பியோடிய வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web