பகீர்.. இரும்பு ஆலையில் கோர விபத்து.. மாயமான 30க்கும் மேற்பட்டோர்.. மீட்பு பணி தீவிரம்!

 
சத்தீஸ்கர் இரும்பு ஆலை  விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் உள்ள இரும்புத் தாது ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.



முங்கேலி மாவட்டத்தின் சரகான் பகுதியில் உள்ள ஆலையில் கட்டுமானத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் புகைபோக்கி பொருத்தப்பட்டு வந்தது. எதிர்பாராத விதமாக புகைபோக்கி சரிந்து விழுந்ததில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கினர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட தகவல்களின்படி, விபத்தில் காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பிலாஸ்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web