பகீர்.. கோழி தீவனம் ஏற்றி வந்த லாரியில் 1,400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்!
கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கோழித் தீவனம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் இருந்து கடத்தப்பட்ட 1,400 கிலோ புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீஸார், மதுரை சர்வேயர் காலனி 120 அடி சாலைப் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட 94 மூட்டைகளில் 1,400 கிலோ புகையிலை பொருட்கள், கோழி தீவனம் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!