பகீர்.. சொந்த உரிமையாளரை கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. பீதியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்!

மதுரை மாவட்டம் திருமங்கலம், முகமதுசா புரம் ஐந்தாவது தெருவில் வசிக்கும் கண்ணன் மற்றும் ஜான்சிராணி தம்பதியினர், தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு வெளிநாட்டு இன நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை, ஜான்சிராணி காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றார்.
இந்நிலையில், நாய் அருகே இருந்த துணிகளை எடுக்க முயன்றபோது, திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது பாய்ந்து கடித்தது. இதில், அவரது இடது கை பலத்த சேதமடைந்தது. ஜான்சிராணியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வெளியே வந்தனர், ஆனால் நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அதன் பிறகு, ஜான்சிராணி நாயிடமிருந்து தப்பித்து மாடியில் இருந்து கீழே வந்தார்.
அங்கிருந்தவர்கள் ஜான்சிராணியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சிராணி, இடது கை மோசமாக சேதமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சொந்த உரிமையாளரை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!