பகீர்.. 3 சிறுமிகளிடம் உல்லாசம்.. 3பேர் போக்சோவில் கைது!

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் வீட்டு பார்ட்டிக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுமி காணாமல் போனதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிக்னலைப் பயன்படுத்தி, சிறுமியின் செல்போன் எண்ணைத் தேடினர். அப்போது, சிறுமி வீனஸ் நகரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியை மீட்க போலீசார் அந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமி தனது காதலனுடன் அந்த இடத்தில் தனியாக தங்கியிருந்தார்.
இதேபோல், மேலும் 2 சிறுமிகள் தங்கள் காதலர்களுடன் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் 3 சிறுமிகளையும் மீட்டு முத்தியால்பேட்டையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பினர். பின்னர், சிறுவன் உட்பட 3 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கரிமுல்லா மீது 11 வழக்குகளும், அபிஷேக் மீது 6 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!