பகீர்.. தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி துடி துடித்து பலி!

 
லியா லட்சுமி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்தது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழனிவேல்-சிவசங்கரி தம்பதியின் மூன்றரை வயது மகள் லியா லட்சுமி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி லியா லட்சுமி அப்பகுதியில் உள்ள பழுதடைந்த கழிவுநீர் தொட்டியில் ஏறினார். அப்போது, ​​எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து, கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாகக் கூறி, உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, காலை 11 மணியளவில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்ததாக கூறப்பட்டது. தினமும் மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் பள்ளி நிர்வாகம், இன்று மதியம் 3 மணிக்கு மாணவர்களின் பெற்றோரை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாணவர்களை பள்ளி ஊழியர்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து அவசர வேகத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web