பகீர்.. கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.. மூவர் அதிரடியாக கைது!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. அதன் தெற்கு கோபுர வாயிலுக்கு அருகில் ஆபத்து காத்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவிலில், நள்ளிரவில், வெளியில் உள்ள சில்வர் கதவை உடைத்து, கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர்.
அப்போது, அந்த வழியாக இரவில் ரோந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமைக் காவலர் ஸ்டாலின் ஆகியோர் கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அங்கு சென்றனர். அவர்களில் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய நிலையில், சாக்கு மற்றும் வாளியில் பணம் சேகரித்து கொண்டிருந்த மற்ற இருவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த கொளஞ்சி மற்றும் அவரது சகோதரர் முத்து என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சிறு சில்லறை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வந்தபோது, விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து தப்பியோடிய மூன்றாவது நபர் அவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!