பகீர்.. ரூபாய் 107 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.. 5 பேர் அதிரடியாக கைது!

 
குஜராத் கும்பல்

சமீபகாலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல பாதுகாப்பையும் மீறி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதைப்போல், அண்மையில் குஜராத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள்

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பட் பகுதியில் உள்ள ஒரு போதைப்பொருள் உற்பத்திப் பிரிவில் குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ரூபாய் 107 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரையும் குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது

கடந்த ஆண்டு நவம்பரில், கடலோர காவல்படை கப்பல்களின் நடமாட்டம் குறித்த விவரங்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web