பகீர்.. அரிசி மூட்டை வாங்கிய நபருக்கு அடித்த ஆஃபர்.. கிடைத்த 15 லட்சம்.. ஷாக் ஆன கடை உரிமையாளர்!
கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா நகரில் வசிப்பவர் சண்முகம் (40). இவர் நெய்வேலி மெயின்ரோட்டில் அரிசி கடை நடத்தி மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். அரிசி விற்கும் போது அவரது மைத்துனர் சீனிவாசன் அரிசி கடையில் இருந்தார். அப்போது, மந்தாரக்குப்பம் அருகே உள்ள குறவன் குப்பம்-மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (62) என்ற நீண்ட நாள் வாடிக்கையாளர் அரிசி வாங்க வந்தார். இவர் கேட்டுக்கொண்டதன் பேரில் சீனிவாசன் 16 கிலோ அரிசி மூட்டையை விற்றார்.
இதற்கிடையில் சில மணி நேரம் கழித்து கடை உரிமையாளர் சண்முகம் கடைக்கு வந்துள்ளார். பணத்துடன் குறிப்பிட்ட அரிசி மூட்டை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த அரிசி மூட்டை எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு வழக்கமாக நன் கடையில் அரிசி வாங்கும் பூபாலனிடம் பையை விற்றதாக சீனிவாசன் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சன்முகம் தலையில் அடித்துக் கொண்டு அந்த அரிசி மூட்டையில் 15 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறினார்.
அதன்பிறகு 2 பேரும் பூபாலன் வீட்டுக்குச் சென்றபோது அரிசி மூட்டை பிரித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். வீட்டில் இருந்த பூபாலன் மகளிடம் சண்முகம், தன்னிடம் இந்த பையில் இருந்த ரூ. 15 லட்சத்தை கொடுக்க்ய்மாறு கூறினார். அரிசி மூட்டையில் ரூ.10 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறி பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகம், மீதி ரூ.5 லட்சம் எங்கே என்று பூபாலனின் மகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பிறகு சண்முகம் வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!