பகீர்...பிரபல தனியார் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் கைது... கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்!
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உட்பட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என இந்தியா மற்றும் நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா இலங்கை என பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாலையிலேயே திடீரென இந்த கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியே பரபரப்பானது. இதனையடுத்து தனியார் கல்லூரியில் சுற்றியுள்ள வீடுதிகளிலும் திடீர் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அத்துடன் அப்பகுதியில் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதிலும் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் சோதனை நடைபெறுகிறது. பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விடுதிகளில் இந்த சோதனை நடைபெறுவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில்சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்தே இந்த விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!