பகீர்... பெற்ற தாயை மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள்!

 
பகீர்... பெற்ற தாயை மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள்!

மேற்கு திரிபுராவில் பெற்ற தாயை குடும்ப தகராறு காரணமாக மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற மகன்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு திரிபுரா, சம்பக்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமர்பாரியில் 62 வயதான பெண்மணி ஒருவரை, அவரது மகன்கள் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரண்டு மகன்களுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார். அவரது மற்றொரு மகன் அகர்தலாவில் வசித்து வந்தார்.

இது குறித்து தகவலறிந்து இரண்டு மகன்களையும் கைது செய்துள்ள போலீசார், குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஜிரானியாவின் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி கமால் கிருஷ்ணா கோலோய் கூறுகையில், "ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்று, மரத்தில் எரிந்த நிலையில் இருந்த உடலைக் கண்டெடுத்தனர். உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்துள்ளோம். 

பகீர்... பெற்ற தாயை மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள்!

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது இரண்டு மகன்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்படுவார்கள். இந்த சம்பவத்திற்கு குடும்பத் தகராறு காரணமாக இருக்கலாம். இதில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web