பகீர்.. அரசு பள்ளி மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமையாசிரியர் மீது பாயும் நடவடிக்கை!

 
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி, அங்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சுத்தம் செய்துள்ளனர். மாணவர்கள் சுத்தம் செய்யும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவர்களை பள்ளியில் எந்த வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என்ற அரசு உத்தரவை மீறி, பள்ளி மாணவர்களை கட்டிடத்தில் ஏறி பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாரா கூறியதாவது, விசாரணையில் NSS மாணவர்கள் அதை சுத்தம் செய்ததாக தெரியவந்துள்ளது. மாணவர்களை இதுபோன்ற வேலைக்கு பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.  இதனால் பள்ளி தலைமையாசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web