பகீர்.. ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் தலைமுடி சிக்கி இளம்பெண் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

 
கேத்தரின் ஷீபா

திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரெயில் இன்ஜின் முன்பு இளம்பெண் ஒருவர் என்ஜின் பிடியில் தலைமுடி மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நிலையில் கிடந்தார்.

இதைப் பார்த்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பயந்து அலறினர். உடனடியாக இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் ரெயிலை அங்கு நிறுத்தி பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயில் இன்ஜினில் சிக்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. சடலமாக மீட்கப்பட்ட பெண் அம்பத்தூர் யோக ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்த கேத்தரின் ஷீபா (22) என்பது தெரியவந்தது. இவர் வேப்பேரியில் உள்ள செயின்ட் கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரியில் 'இளங்கலை விளையாட்டு அறிவியல் கல்வி' படித்து வந்தார்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் இடையே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் இறந்தது தெரியவந்துள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது விபத்து நடந்ததா? ரயில் இன்ஜின் முகத்தில் சிக்கியது எப்படி? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. மேலும், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 10 நிமிடம் தாமதமாக சென்றன.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web