17 வயதில் ஆசிரியருடன் காதல்... பிரபல நடிகை ஓபன் டாக்!
பிரபல தெலுங்கு நடிகை ராஷி சிங், தான் 17 வயதில் கல்லூரிக்குச் சென்றபோதுத் தனக்கும் தனது விரிவுரையாளருக்கும் இடையே மலர்ந்த காதல் குறித்துப் பேசியுள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது '3 ரோஸஸ்' சீசன் 2 என்ற வெப் தொடரில் நடித்து வரும் ராஷி சிங், அதன் விளம்பரப் பேட்டியில் தனது கல்லூரி நாட்களில் நடந்த காதல் கதையைப் பற்றிப் பேசினார்.
அப்போது, "எனது கல்லூரி நாட்களில் எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் என் ஆசிரியர் (விரிவுரையாளர்). அவர் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார். தேர்வுத் தாள்களை முன்கூட்டியே எனக்குக் கொடுப்பார். வைவாவின் போது அவர் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார். நாங்கள் ஒருவருக்கொருவர் எதிரே அமர்ந்து நேரத்தைக் கடத்துவோம். அப்போது எனக்கு 17 வயது."

தற்போது அந்தக் காதலர் குறித்துப் பேசிய அவர், "இப்போது அவருக்குத் திருமணமாகி விட்டது. அவர் இன்ஸ்டாகிராமில் என்னைப் பின்தொடர்கிறார்" என்றும் சிரித்தவாறே கூறியுள்ளார். ராஷி சிங் பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்தக் காதல் கதை குறித்த கருத்துக்கள் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
