குடும்ப பகையால் 5 பேரை கொன்ற விவகாரம்.. குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற காவல்துறை!

உத்தரபிரதேச மாநிலம் விசாரி கேட் பகுதியைச் சேர்ந்த மொயீன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மொயீனின் உறவினரான ஜமீல் உசேன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஜமீல் உசேன் மீது ஏற்கனவே டெல்லி மற்றும் தானேயில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கொலை வழக்கில் ஜமீல் உசேன் தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50,0000 பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமீல் உசேன் மீரட் பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று காலை ஜமீல் உசேன் வீட்டை போலீசார் அணுகியபோது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
அப்போது போலீசார் நடத்திய என்கவுண்டரில் ஜமீல் உசேன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் சொத்து தொடர்பாக குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமீல் உசேன் தனது உறவினர்கள் 5 பேரை கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!