’குடும்ப பிரச்சனை’.. மன அழுத்ததில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். 2009 ஆம் ஆண்டு காவல் துறையில் கான்ஸ்டபிளாக சேர்ந்த இவர், பின்னர் உதவி ஆய்வாளர் பதவிக்கு ஆஜராகி, 2017 முதல் சிறப்புப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் (சப்-இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரோடு நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், இன்று அரச்சலூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கபட்டார். இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சசிகுமார் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரின் மனைவி வெள்ளோடு காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இறந்த சசிகுமார் கடந்த மூன்று ஆண்டுகளாக காவல் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் வகுப்பை நடத்தி வந்தார். வீட்டில் கணவன் மனைவி இடையே பிரச்சனை இருந்தது.
அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்கி புதிய வீடு கட்டியுள்ளார். இதில், மன அழுத்தத்தில் இருந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது." காவல் அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகுப்பு நடத்தி வந்த உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டது ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!