குடும்ப பிரச்சினை.. மனைவி, மகனை கொன்று தற்கொலைக்கு முயற்சித்த தொழிலதிபர்!

 
ஜிவானி

குஜராத்தின் சூரத் நகரில் குடும்ப பிரச்சினைக்காக 34 வயது தொழிலதிபர்  ஒருவர் தனது மனைவியையும் மகனையும் கத்தியால் குத்திக் கொன்று, பெற்றோரைத் தாக்கி, பின்னர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையின்படி, அந்த நபர்  ஸ்மித் ஜிவானி என கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் காலமான அவரது மாமாவின் குடும்பத்தினர், அவரது குடும்பத்துடனான உறவைத் துண்டித்து, தங்கள் வீட்டிற்கு ஒருபோதும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விபுல் படேல் தெரிவித்தார்.

ஜிவானி தனது மனைவி ஹிரால் (30), மகன் சாஹத் (4), தாய் விலாஸ்பென் மற்றும் தந்தை லாபுபாய் ஆகியோரை சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை கத்தியால் குத்தினார். தனது குடும்ப உறுப்பினர்களை கத்தியால் தாக்கிய பின்னர், ஜிவானி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். தாக்குதலில் ஹிரால் மற்றும் சாஹத் இறந்த நிலையில், ஜிவானி மற்றும் அவரது பெற்றோர் காயமடைந்த நிலையில், அவர்கள் மூவரும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

போலீஸ்

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், "ஜிவானியின் இறந்த மாமாவின் குடும்பத்தினர் உறவை முறித்துக் கொண்டதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web