பிரபல நடிகர் ஜெயசீலன் காலமானார்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

 
ஜெயசீலன்

 நடிகர் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் காமெடி ரவுடியாக வந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகர் ஜெயசீலன். இவர்  தெறி படத்தில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் "ட்விங்கிளு ட்விங்கிளு சூப்பர் ஸ்டாரு.. அவ்வையார்.. வாத்தியார்" என தப்புத் தப்பாக ரைம்ஸ் பாடி காமெடி செய்யும் அடியாளாக நடித்தார். இவர்  உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.  ஒரு சில காமெடி காட்சிகளில் நடித்தால் கூட ரசிகர்களுக்கு சில நடிகர்கள் பரீட்சையமாகிவிடுவார்கள்.

அப்படியொருவர் தான் நடிகர் ஜெயசீலன். தனது உருவத்தை வைத்தே சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு  அவரது உறவினர்களையும் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  தனுஷின் புதுபேட்டை, விஜய்யின் தெறி, விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் உட்பட  பல படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.   அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தில் பள்ளியில் ரவுடிகள் சரக்கடித்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் காட்சியில் அவர்களை நடிகர் விஜய் உள்ளே வந்து பாடம் எடுப்பது போல வாத்தி ரெய்டு நடத்தி அடித்து விரட்டும் காட்சியில் நடிகர் ஜெயசீலன் "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" ரைம்ஸ் பாடுவதற்கு பதிலாக காமெடியாக வசனத்தை பேசி ரசிகர்களை விழுந்து விழுந்து  சிரிக்க வைத்திருப்பார்.

தெறி

ஜெயசீலன் நடிகர் விஜய் சேதுபதியுடன் நெருக்கமான நட்புடன் பழகி வந்தார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.  ஜெயசீலனுக்கு வயது 40 தான்.   மஞ்சள்காமாலை நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர் அதற்குள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருந்தார் எனவும்,  திருமணமே செய்யாமல் சினிமாவில் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வந்த ஜெயசீலனின் மறைவு அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் உறவினர்களையும், ரசிகர்களையும்  மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web