தந்தையான பிரபல சீரியல் நடிகர்.. இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் வைரல்!

 
அவினாஷ்

சீரியல் நடிகர் அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையான மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்துள்ளார். பின்னர் அந்த தொடரில் இருந்து விலகினார். துபாயைச் சேர்ந்த இவர் தமிழில் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவினாஷ், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளராக வெற்றி பெற்றார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சீரியல் நடிகர் அவினாஷ் கடந்த ஆண்டு தனது 13 வருட காதலி தெரசாவை மணந்தார். தற்போது அப்பாவாகும் செய்தியை அவினாஷ் தனது இன்ஸ்டாகிராமில் க்யூட் போட்டோக்களுடன் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web