பிரபல தியேட்டர் கேன்டீனில் காலாவதியான பொருட்கள் விற்பனை...!

தமிழகத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக லதா திரையங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் உப்படமங்களம் பகுதியில் வசித்து வரும் 38 வயது தீபன் செங்கல்பட்டு மேட்டுத் தெரு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நேற்றிரவு இரவுக்காட்சி படம் பார்ப்பதற்காக செங்கல்பட்டு லதா திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து திரைப்படம் பார்த்தார். இடைவேளையின் போது தீபன் தனது குடும்பத்தினருக்கு தியேட்டர் கேன்டீனிலிருந்து சமோசா, பாப்கார்ன் உட்பட பலவகையான தின்பண்டங்களை ரூ1000 கொடுத்து வாங்கியுள்ளார்.
உணவு பொருட்களை சாப்பிடும்போது அனைத்து உணவு பொருட்களில் இருந்தும் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. கெட்டுப்போன உணவு பொருட்களை சம்மந்தப்பட்ட கேன்டீனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை விலை கொடுத்து வாங்கி வாடிக்கையாளர் சாப்பிட்டு வருகின்றனர். அனைத்து பொருட்களும் காலாவதியாகி துர்நாற்றம் வீசி வருகிறது. உணவு பொருட்களுக்கான பணத்தை தீபன் திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு திரையரங்க கேண்டின் ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். ஆத்திரம் அடைந்த தீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீபன் மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானம் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் திரையரங்க வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!