BREAKING! குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

 
BREAKING!  குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

தமிழ் திரையுலகில் 80களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை குஷ்பு. இவர் இப்போதும் திரைத்துறையிலும், அரசியலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு அப்டேட்டாக உள்ளார். கடந்த சில தினங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், எந்தவொரு ட்வீட்டும் இடம் பெறவில்லை. இதனிடையே, இன்று காலை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

BREAKING!  குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

அதில் அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, ட்வீட்கள் அத்தனையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெயரும் BRIANN என்று மாற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

BREAKING!  குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!


இது குறித்து குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “மூன்று நாட்களுக்கு முன்பு என்னுடைய ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதனால் கடந்த சில நாட்களாக என்னுடைய ட்விட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல’ என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web