பயங்கரம்...விவசாயி அரிவாளால் வெட்டி தலை துண்டித்து கொடூரக் கொலை!

 
கடையம்

 தென்காசி மாவட்டம் கடையம்   கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் தெருவில் வசித்து வருபவர் 45 வயது  இருதயராஜ் . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர்  அச்சங்குளம்- கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார். டிசம்பர் 20ம் தேதி  இரவு இருதயராஜ் குளத்தில் காவலுக்கு இருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டினர்.  

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து  உடனடியாக  போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதயராஜ் உடல் தனியாக கிடந்த தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இருதயராஜிக்கும், சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதே நேரத்தில் இருதயராஜ், மீன் பாசி குத்தகைக்கு எடுத்து இருப்பதால் இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாமா?, அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில்   தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web