இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்... தொடர் மழை.. பாழான பயிர்கள்... அனைவரும் கலந்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு!
Updated: Dec 19, 2024, 05:44 IST
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் விவசாயிகள் கதறுகின்றனர். லட்சக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்கள் பாழாகி உள்ளன. பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வந்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக விளைநிலங்கள் பாழான நிலையில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு டிசமபர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” வருகின்ற 19.12.2024 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ‘முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web